ஏகாதசி விரதத்தின் கதை

ஏகாதசி விரதம் உருவான கதை

 

திரேதா யுகத்தில் முரன் எனும் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்தான். அவன் தவத்தில் இருக்கும் முனிவர்களையும் தேவர்களையும், துன்புறுத்தினான் கொடுமைகள் செய்தான்.

 

அவனது கொடுமைகளை தாங்கமுடியாத முனிவர்களும் , தேவர்களும் பெருமாளிடம் சென்று அரக்கன் முரனை அளிக்க

 

வேண்டும் என்று முறையிட்டனர். திருமாலும் அரக்கன் முரனை அழிக்க முடிவு செய்தார் சக்கராயுதத்துடன் முரனை அழிக்க போருக்கு புறப்பாட்டார்.

 

திருமாலுக்கும் முரனுக்கும், கடுமையாக போர் நடைபெற்றது . விஷ்ணுவின் சக்கராயுதத்திற்கு முன்னாள் அரக்கனால் நிற்க முடிய வில்லை .இருப்பினும் அவன் பல மாய_வடிவங்களில் போர்புரிந்து வந்தான். தினமும் காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரை போர்_நடக்கும்.

 

தினமும் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு போர் முடிந்து திருமால் வத்திரிகாசிரமத்தில் இருக்கும் ஒரு குகைக்குசென்று இளைப்பாறுவார். காலை சூரியன் உதித்ததும் , அரக்கனுடன் போர்புரிய போர்களத்திற்க்கு செல்வார்.

 

ஒருநாள் ஆசிரமத்தில் திருமால் படுத்திருந்தபோது அங்குவந்த முரன், போர்விதிக்கு முரணாக அவரை திடீஇர என்று தாக்க தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலிலிருந்து ஒரு_மகத்தான சக்தி பெண் வடிவில் எழுந்தது . படைகலங்களுடன் விசுவ ரூபத்துடன் தோற்றமளித்த அந்தபெண் அரக்கனை அழித்தாள்.

 

இதனால் மனம் மகிழ்ந்த திருமால் . தமது எதிரில்_நின்ற சக்தியைநோக்கி, சக்தியே அசுரனை அழித்த_உனக்கு ஏகாதசி என திருநாமத்தை சூட்டுகிறேன். அரக்கனை அழித்த மார்கழி மாதத்தில் உன்னை விரதமிருந்து வழிபடு வோருக்கு யாம் வைகுண்டபதவியை தந்து ஆட்கொள்வோம் என கூறினார். திருமால் கொடுத்தவரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாகும்

 

சக்தி வெளிவந்து அரக்கனை வென்றது மார்கழி மாதத்தின் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின்_சக்திக்கே ஏகாதசி என பெயர் ஏற்ப்பட்டது.முனிவர்களும் , தேவர்களும் ஏகாதசி அன்று விரதமிருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும்பெற்றனர்.

 

ஏகாதசி விரதம், உருவான கதை,ஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும், திரேதா யுகத்தில், முரன், கொடிய அரக்கன், ஏகாதசியின் வரலாறு ஏகாதசி விரதம்.

 

ஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதம் ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள். ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியான இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான– தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் உண்டாகுமோ, அவ்வளவு பலன்களையும் இந்த ஓர் ஏகாதசியே கொடுக்கும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், எம வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ கூட இந்த விரதத்தைக் கடைபிடித்தாலும், பலன் கிடைக்கும். அப்படியானால், இந்த விரதத்தை முறைப்படி செய்தால், அதனால் விளையும் நன்மைகளையும், மேன்மைகளையும் சொல்லவும் வேண்டுமா என்ன?