நவக்கிரக தோஷம் நீக்கும் அனுமன்

நவக்கிரக தோஷம் நீக்கும் அனுமன்

 

ஸ்ரீ ராமனுடைய ஜாதகத்தில் மரண யோகத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைத்த ராவணன் நவ கிரகங்களையும் தன்னுடைய மந்திர பலத்தால் கராகிரகத்தில் கட்டிவைத்தான். இதை அறிந்த அனுமன்

ராவணனுடைய அரக்க சேனைகளை அடித்து உடைத்து சென்று அவன்

பிடியில் கட்டுண்டு கிடந்த நவ கிரகங்களையும் ஸ்ரீ ராம நாமத்தின் பலத்தினால் சிறை மீட்டான். அந்த நன்றி கடனுக்காக நவகிரகங்களும்

அனுமனுக்கு வாக்களித்தார்கள். அனுமனே இன்றுமுதல் தங்களை வணங்கும் அடியவர்களுக்கு தீய பலன்களை தரமாட்டோம் நல்ல பலன்களை மட்டுமே தருவோம் என்று.

 

வாழ்க ஸ்ரீ ராம நாமம் - வளர்க அனுமன் புகழ் .