திருமண தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர்

திருமண தடை,தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

 

சாந்த சொரூபமான பொட்டு வைக்கும் ஆஞ்சநேயர் படம் என்று கடைகளில் கேட்டால் தருவார்கள். அதனை வாங்கி வந்து நல்ல நாளாக தேர்ந்தெடுத்து கிழக்கு பார்த்து பூஜை அறையில் வைத்து ஸ்ரீராமனையும், சீதையையும் மனதில் தியானித்து அனுமன் காயத்ரி அல்லது அனுமன் மூல மத்திரம் அல்லது ஸ்ரீராம் ஜெயராம் என்று மந்திரத்தை மனதை ஒருநிலைப்படுத்தி உச்சரிக்கவும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது இந்த மந்திரத்தை உச்சரிக்கவும்.

சொல்லி முடித்ததும் அனுமனின் வால் பகுதியில் தூய சந்தனத்தை வைத்து அதன்மீது குங்கும பொட்டு வைத்து பூஜை செய்யவும். பூஜையின்போது துளசி மட்டும் பயன்படுத்தவும். வேறு எந்த பூவையும் பயன்படுத்தக்கூடாது. பூஜை முடிவின்போது 13 உளுந்து வடைகள் செய்து நிவேதனம் செய்யவும்.

மற்ற நாட்களில் வாழைப்பழம் நிவேதனம் செய்யலாம். வடையை நல்லெண்ணையில் செய்யவும். ஒரு சிறிய பாத்திரத்தில் நீர்விட்டு துளசியை இட்டு பச்சை கற்பூரம் சேர்த்து தீர்த்தமாக பயன்படுத்தவும். இவ்வாறு செய்துவர விரைவில் திருமணம் கூடிவரும்.